search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் சீற்றம்"

    • விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து 2 மணிநேரம் நிறுத்தம்
    • வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவ ள்ளுவர் சிலை அமைந் துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப் பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப் பட வில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில்சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி யது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகி ல்சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப் பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • சுற்றுலா பயணிகள் ஓட்டம்-பரபரப்பு
    • கடந்த 5 நாட்களாக கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, வட்டக்கோட்ைட, சொத்த விளை கடற்கரை, குளச்சல் கடற்கரை, லெமூர் கடற்கரை போன்றவற்றிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    விடுமுறை நாட்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அதன்படி இன்று அனைத்து கடற்கரைகளிலும் ஏராளமானோர் குடும்பத்து டன் வந்திருந்தனர்.

    வழக்கமாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் குமரி மாவட்டத் தில் கடல் சீற்றமாக இருக்கும். கடந்த 5 நாட்களாக கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அடிக்கடி கடல் நீர் உள் வாங்குவதும், கடல் நீர்மட்டம் தாழ்வு அடைவ தும் நிகழ்ந்து வருகிறது. இன்று பகலும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பின.

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை யில் இன்று ஏராளமானோர் சுற்றுலா வந்திருந்தனர். அப்போது கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் கடற் கரைக்கு வந்தது. ராட்சத அலைகள் வேகமாக காணப் பட்டதால் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனை கண்ட சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

    கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்பட வில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி யது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. எனவே இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இத னால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • நிரந்தர அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டுகோள்
    • பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும்.

    இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம், உள் வாங்குதல் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டு வரு கின்றன. நேற்று முதல் குளச்சல் அருகே கொட்டில் பாட்டில் கடல் சீற்றமாக உள்ளது. ராட்சத அலைகள் எழுந்து அலை தடுப்பு சுவரை தாண்டி விழுகிறது.

    கடந்த ஆண்டு பழைய ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் மேற்கு சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ஏற்பட்ட கடல ரிப்பில் பழைய ஆலயம் அருகில் கிழக்கு பகுதியில் மேலும் ஒரு சாலை துண்டிக் பப்பட்டுள்ளது. ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயமும் ஏற்பட்டது.

    இதனால் கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 10 வீட்டினர், வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்து உள்ளனர்.

    கொட்டில்பாடு கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளை பாதுகாக்க நிரந்தர அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஏராளமான மீனவர் கிராமங்கள் உள்ளது. இங்கு ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும்.

    அப்போது கடற்கரை ஒட்டியுள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்து கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று காலையிலும் கடல்சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    சின்ன முட்டம், குளச்சல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள் அந்த பகுதியில் நங்கூரம் பாய்த்து நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு சில வள்ளங்களில் மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

    கடல் அலைகள் 15 அடி முதல் 20 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. ராட்சத அலைகள் கடற்கரையொட்டி உள்ள தூண்டில் வளைவுகள் மீது வேகமாக மோதி சென்றன. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடல் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கொல்லங்கோடு தூத்தூர் இரையுமன் துறை வள்ளவிளை சின்னத்துறை போன்ற கடற்கரை கிராமங்களில் கடல்சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. இன்று காலையிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையையொட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் வேகமாக மோதியது. தூண்டில் வளைவு இல்லாத பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி-கேரளாவை இணைக்கும் தூத்தூர்-பொழியூர் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராட்சத அலைகள் அந்த சாலைகளை இழுத்துச்சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் அடுக்கப்பட்டு இருந்த கற்களையும் அலைகள் கடலுக்குள் இழுத்துச்சென்றது.

    இந்த சாலையை குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள மீனவர்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். இங்கிருந்து அவர்கள் கேரளாவுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு இந்த சாலை மிகவும் வசதியாக உள்ளது.

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இதை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை தற்போது துண்டிக்கக்கூடிய சூழலில் உள்ளது. பள்ளி வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.
    • ராமேசுவரம் துறைமுகம், மண்டபம், பாம்பன் இறங்குபிடி தளங்களில் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்:

    தமிழகத்தையொட்டி உள்ள வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    அதன்படி நேற்று முதல் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது. மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ.வரை காற்று வீசி வருகிறது.

    தனுஷ்கோடி, பாக்ஜல சந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

    இதன் காரணமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து 1500 விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் கடலுக்கு செல்லவில்லை. ராமேசுவரம் துறைமுகம், மண்டபம், பாம்பன் இறங்குபிடி தளங்களில் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    2-வது நாளாக இன்றும் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான தனுஷ்கோடிக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நேற்று முதல் இந்த பகுதியில் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. மேலும் சூறாவளியால் புழுதி காற்றும் வீசி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அக்காள்மடம், முகுந்த ராயர் சத்திரம், அரிச்சல் முனை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது. பல இடங்களில் சாலைகளில் மணல்கள் மூடியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டது.

    பாம்பனில் கடல் சீற்றமாக இருந்தது. அங்குள்ள தூக்கு ரெயில் பாலம் அருகே திடீரென கடல் பல அடி தூரம் உள்வாங்கியது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைபர், நாட்டுபடகுகள் கடற்கரை மணலில் தரைதட்டி நின்றன.

    • வானிலை ஆய்வு மையம் கடலில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டு துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி கடல் சீற்றமாக காணப்பட்டது.

    மேலும், வானிலை ஆய்வு மையமும் கடலில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் இன்று 2-து நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ஒரு சில மீனவர்கள் கரையோரம் பைபர் படகு மூலம் மீன்பிடிக்க சென்ற நிலையில் காற்று அதிகமாக வீசியதால் உடனடியாக கரை திரும்பினர்.

    மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளது.

    இதனால் கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • காலை பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது
    • கடலில் ராட்சத அலைகள் எழும்பின. 15 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வந்தது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் காலை பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. தக்கலை, குழித்துறை, அஞ்சுகிராமம், சுசீந்திரம், தடிக்காரன்கோணம், கீரிப்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்தது.

    ஏற்கனவே விவசாயிகள் மழையை எதிர்நோக்கி உள்ள நிலையில் தற்பொழுது மழை பெய்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பருவமழை கை கொடுக்குமா? என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். பாசன குளங்கள் வறண்டு காணப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையிலும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது.

    எனவே பருவமழை கை கொடுத்தால் மட்டுமே கன்னி பூ சாகுபடி பணியை முழுமையாக செய்து முடிக்க முடியும் என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    அரபிக்கடல் பகுதியில் இன்று காலை முதலே சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. கன்னியாகுமரி கோவளம் குளச்சல் பகுதிகளில் கடலில் ராட்சத அலைகள் எழும்பின. 15 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியது.

    கடற்கரையையொட்டி உள்ள தூண்டில் வளைவுகள் மீது ராட்சத அலைகள் மோதியது. மார்த்தாண்டம் துறை வள்ளவிளை, தூத்தூர், இறையுமன் துறை பகுதியிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. ஒரு சில மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    • நேற்று முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.
    • குளச்சல், கொட்டில்பாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது.

    குளச்சல்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம்.

    ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழும். அதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின.

    இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த 1-ந்தேதி முதல் 61 நாட்களுக்கு மேற்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. குளச்சல் பகுதி விசைப்படகுகள் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகினர் விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் வள்ளங்கள், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன்பிடித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழுந்து செல்கிறது.

    இதனால் அங்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுகிறது.

    இதனால் பெரும்பான்மையான கட்டுமரங்கள், வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் குறைவான நெத்திலி மீன்களே கிடைத்தன. மணற்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் பாதுகாப்பாக மேடான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கடலில் காற்று காரணமாக கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லாததால் குளச்சலில் இன்று மீன் வரத்து குறைந்தது.

    • குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது.
    • விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.

    குளச்சல்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும். இதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    தற்போது கடந்த 1-ந்தேதி முதல் மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து செல்கிறது.

    இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் குவிந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மணல்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.

    • பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது
    • மணற்பரப்பில் விழுந்து செல்லும் அலை வெள்ளம் மணற்பரப்பை அடித்து செல்கிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழும். அதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    தற்போது காற்று சற்று தணிந்த நிலையில் மீண்டும் விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்றன. வழக்கம்போல் குறைந்த அளவே பைப்பர் வள்ளங்கள் மீன் பிடித்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழுந்து செல்கிறது. மணற்பரப்பில் விழுந்து செல்லும் அலை வெள்ளம் மணற்பரப்பை அடித்து செல்கிறது. இதனால் அங்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

    குளச்சல், கொட்டில்பாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் மணற்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் குறைந்தளவு மீன்களே கிடைத்தன. கிடைத்த மீன்களை மீனவர்கள் ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

    • மோக்கா புயல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என அறியப்பட்டுள்ளது.
    • புயல் எச்சரிக்கை விதமாக 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் அதி தீவிர புயலாக மாறியது. போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 610 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடலூர் துறைமுகத்தில் தூர புயல் எச்சரிக்கை விதமாக 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சுப உப்பலவாடி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. தற்போது மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் ஒரு சில மீனவர்கள் பைபர் படகு மற்றும் கட்டுமரத்தில் அரசு நிபந்தனைக்குட்பட்டு மீன்பிடித்து வந்தனர். தற்போது வழக்கத்தை விட கடல் சீற்றம் மற்றும் கடல் பகுதியில் அதிகளவில் காற்று வீசப்பட்டு வருவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் கடலோர பகுதிகளில் எந்த வித அசம்பாவதமும் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக பயணிகள் கடலில் ஆபத்தை உணராமல் குளித்தனர்.
    • காலையில் கடல் சீற்றம் சற்று குறைந்து, மிதமான காற்று வீசுவதால் பாய்மர படகு போட்டி காலையில் இருந்து நடந்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதிகளில் நேற்று மாலையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்தனர். அதையும் மீறி கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக பயணிகள் கடலில் ஆபத்தை உணராமல் குளித்தனர்.

    இந்த நிலையில் கோவளம் கடற்கரையில் நடந்து வரும் பாய்மர படகு போட்டியும், அப்பகுதி கடல் சீற்றம் காரணமாக நேற்று நிறுத்தப்பட்டது. அதையும் மீறி சில வீரர்கள் பயிற்சிக்காக கடலுக்குள் செல்ல முயற்சி செய்தனர். அதில் கடல் அலையில் சிக்கி ஒரு படகின் விலை உயர்ந்த பாய்மரம் கிழிந்தது. கடலோர காவல்படை வீரர்கள் அவர்களை கரைக்கு அழைத்து வந்தனர்.

    இன்று காலையில் கடல் சீற்றம் சற்று குறைந்து, மிதமான காற்று வீசுவதால் பாய்மர படகு போட்டி காலையில் இருந்து நடந்து வருகிறது. புயல் எச்சரிக்கை இருப்பதால் போட்டி நடைபெறும் இடத்தில் கூடுதலாக கடலோர காவல்படை நீச்சல் வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×